ஐ.நாவில் ஏப்ரல் 20ஆம் நாள், சீன மொழி தினம் கொண்டாடப்பட்டது. ஐ.நாவில் சீன மொழி தினம் மற்றும் ஐ.நாவுக்கான சீன மொழி அலுவலகம் நிறுவப்பட்டு இவ்வாண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றன. இதே நாளில் நடத்தப்பட்ட 3 கண்காட்சிகள் மூலம், ஐ.நாவில் சீன மொழியின் பங்கு, சீன மொழி மூலம் பதிவு செய்த பண்பாட்டு நினைவுகள், அழகியல் உணர்வு மற்றும் கலை குறிகள் முதலியவை வெளிக்காட்டப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஐ.நாவின் பொது பேரவை மற்றும் மாநாட்டு மேலாண்மைக்கான துணைச் செயலாளர் சலே கூறுகையில்,
ஐ.நாவுக்கான சீன மொழி அலுவலகம் நிறுவப்பட்ட 80 ஆண்டுகளில், இந்த அலுவலகம் மற்றும் வேறு சீன மொழி பணியாளர்களுடன் இணைந்து, ஐ.நாவின் இலட்சியத்திற்கு மாபெரும் பங்காற்றியுள்ளது என்று பாராட்டினார்.
