அண்மையில், பாகிஸ்தான் அறிவு மற்றும் பொது கொள்கை மையத்தின் தலைவர் மஹ்மூத் அல்-ஹஸ்ஸா கான் தி பாகிஸ்தான் ஒபிஸ்ர்வேர் என்ற இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரையில் கூறுகையில், தற்போது, உலகம் அமைதி மற்றும் தொடர்ச்சியான கொந்தளிப்பு மாறி மாறி நிகழ்ந்த நிலையில் உள்ளது. நாணயத் துறையில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு, தொழில் நுட்ப முன்னேற்றம், தொழிற்துறை திறன் முதலிய துறைகளில் சிறப்பான ஒருங்கிணைப்பால் சீனா நிதானமான ஆற்றலாக மாறியுள்ளது. சீனா, உண்மையான உலகின் பாதுகாப்பான ஈவுத்தொகை ஆகும் என்று கூறினார்.
சீனாவின் சூரிய ஆற்றல், காற்றாற்றல், மின்கல தொழில் நுட்பம் ஆகியவை உலக எரியாற்றல் மாறுவதில் பயனுள்ள முக்கியமான தேர்வை ஏற்படுத்தியுள்ளது என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டது.
