சீனாவிற்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு 2013 மற்றும் 2023 க்கு இடையில் இருமடங்காக அதிகரித்து 200 பில்லியன் டாலராக உள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் துணை அமைச்சர் லீ ஃபெய் கூறினார்.
இது குறித்து அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில், 11 ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் முதல் சீனா-தெற்காசியா கண்காட்சி நடைபெற்றதிலிருந்து, சீனாவும் தெற்காசிய நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றங்களின் வளர்ச்சியை பராமரித்து வருகின்றன என்று கூறினார்.
எட்டாவது சீனா-தெற்காசியா பொருட்காட்சி குன்மிங்கில் ஜூலை 23 முதல் 28ஆம் நாள் வரை நடைபெறும் என்று அவர் அறிவித்தார். வணிக அமைச்சகம் மற்றும் யுன்னான் மாகாண அரசு இணைந்து நடத்தும் இந்நிகழ்வு,இவ்வாண்டு சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றங்களுக்கான மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று அவர் கூறினார். இதுவரை, ஏறக்குறைய 2,000 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க கையெழுத்திட்டுள்ளன, அவற்றில் பாதி நிறுவனங்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவை என்று தெரிய வந்துள்ளது.