அமெரிக்காவின் கூட்டாளிகள் குறைவு

அண்மையில், ஸ்பானியர்கள் என்ற செய்தித்தாள், தனது இணையத்தளத்தில், டிரம்ப் அட்லாண்டிக் கடந்த உறவுகளைச் சிதைக்கிறார்: கால் பங்கு ஐரோப்பியர்கள் மட்டுமே அமெரிக்காவை இன்னும் ஒரு கூட்டாளியாகக் கருதுகின்றனர்” என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

ஐரோப்பிய வெளியுறவுக் கவுன்சில் என்ற சிந்தனைக் கிடங்கு வெளியிட்ட அறிக்கையிலும், பிரிட்டிஷ் கருத்துக் கணிப்பு நிறுவனமான பப்ளிக் ஃபர்ஸ்ட் அமெரிக்க ஊடகமான பொலிடிகோவுடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றிலும் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

அமெரிக்காவை நம்பகமான கூட்டாளி என்ற நிலையிலிருந்து அவசியமான பங்காளியாக குறைத்துள்ளதாகவும், அதனிடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது என்று டென்மார்க், பிரிட்டன், போலந்து ஆகிய அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு கொண்ட நாடுகளில், முறையே 58, 53 மற்றும் 47 விழுக்காடான மக்கள் கருதுவதாக ஐரோப்பிய வெளியுறவுக் கவுன்சிலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஸ்பெயினில் 10 விழுக்காடான மக்கள் மட்டுமே அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டாளியாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author