அமெரிக்காவுடன் மேலதிக துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள சீனா விருப்பம்

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யுங்ச்சியான் மே 14ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரத்துக்கான சீனத் தரப்பு பொறுப்பாளரும், துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்கத் தரப்பு பொறுப்பாளரும், நிதி அமைச்சருமான ஸ்காட் பெசென்டுடன் 13ஆம் நாள் தென் கொரியாவில் பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு நடத்தினார். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துகளை வழிக்காட்டலாக கொண்டு, ஒன்றுக்கொன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றி ஆகிய கோட்பாட்டுகளைப் பின்பற்றி, தத்தமது அக்கறை கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, நடைமுறை ஒத்துழைப்புகளை மேலும் விரிவாக்குவது ஆகியவை குறித்து, இரு தரப்பினரும் மனம் திறந்த, ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான பரிமாற்றத்தை மேற்கொண்டனர் என்றார்.

மேலும், அமெரிக்காவுடன் இணைந்து, மேலதிக துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பிரச்சினைகளைத் தீர்த்து, சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான, நிதானமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author