தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தற்போது 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி, 60 சதவீதமாக வழங்க முதல்வர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1, 2026 முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊழியர்களின் உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி
