சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கும் அமெரிக்க அரசு தலைவர் டிரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் 14ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான உத்திநோக்கு நிலைத்தன்மையுடைய உறவை உருவாக்குவதற்கான புதிய பார்வை குறித்து இருதரப்பினரும் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
ஆக்கப்பூர்வமான உத்திநோக்கு நிலைத்தன்மை என்பது, ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட நேர்மறையான நிலைத்தன்மையாகவும், குறிப்பிட்ட வரம்புக்குள் போட்டியிடக்கூடிய சீரான நிலைத்தன்மையாகவும், கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய இயல்பான நிலைத்தன்மையாகவும், அமைதியை அடையக்கூடிய நிலையான நிலைத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சீன-அமெரிக்க உறவின் புதிய பார்வையை ஒரே திசையில் முன்னெடுக்கப்படும் செயல்களாக மாற்றவும், இருநாட்டு உறவின் நிலையான, ஆரோக்கியமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
