ஹோர்முஸ் ஜலசந்தியில் திடீரென மூழ்கிய இந்தியக் கப்பல்… அரண்டு போன மாலுமிகள்.. ஓமன் கடலில் நடந்த பகீர் சம்பவம்…!!! 

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி அருகே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்திய சரக்குக் கப்பல் ஒன்று ஓமன் நாட்டு கடற்கரை அருகே கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘ஹாஜி அலி’ என்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட அந்த சரக்குக் கப்பல், மர்ம நபர்களின் தாக்குதலால் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

எனினும், கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஆறுதலான செய்தியாகும். அதே சமயம், ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் நங்கூரமிட்டிருந்த மற்றொரு கப்பல் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு ஈரான் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடல்வழிப் பாதையில் அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் சர்வதேச கடல்சார் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author