ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஐநாவில் தாக்கல் செய்தது.
அந்த தீர்மானத்தை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துவிட்டது என்பதும் குறிபிடத்தக்கது.
இந்நிலையில், இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் தூதுவர் முனீர் அக்ரம், இந்தியா புதிதாக அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்நத இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறது.