திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியா..? – தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி திமுக..!

Estimated read time 0 min read

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் போட்டியிட வேண்டும் எனத் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடு இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், சென்னை அறிவாலயத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படவுள்ளது. கட்சியின் பொதுக்குழு மற்றும் உயர்நிலை செயல்திட்டக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, இந்தத் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

You May Also Like

More From Author