லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தோங்லூனுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் ஜனவரி 8ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளுடன், சீன-லாவோஸ் உறவு வரலாற்றில் மிக நல்ல காலக் கட்டத்தில் உள்ளது. நெடுநோக்கு அர்த்தம் கொண்ட சீன-லாவோஸ் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார். மேலும், பொதுச் செயலாளர் தோங்லூனுடன் இணைந்து, சீன-லாவோஸ் உறவின் வளர்ச்சிக்கான நெடுநோக்கு வழிக்காட்டலை வலுப்படுத்தி, கட்சி மற்றும் நாட்டின் ஆட்சிமுறை பற்றிய பரிமாற்றத்தை ஆழமாக்கி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தி, சீன-லாவோஸ் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் உயர் நிலைக்கு முன்னேறுவதை ஊக்கமளித்து, இரு நாட்டு மக்களுக்கு நம்மை புரிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author