தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை நடத்துவதாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் என்றும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தனது சொந்த பிரதேசங்களின் மீது இறையாண்மையை கொண்டிருப்பது பாகிஸ்தானுக்கு எரிச்சலூட்டுவதாகவும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்