வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சொந்த நாடு திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஷேக் ஹசீனா, டெல்லியில் சுதந்திரமாக வாழும்போதும், சொந்தநாடு திரும்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதித்தது அநீதி எனவும் அவர் கூறியுள்ளார்.
