சொங்சிங் மாநகரில் மணிக்கு 350 கிலோமீட்டருள்ள அதிவிரைவு தொடர் வண்டி
அண்மையில், மேற்கு சொங்சிங் நிலையத்தில் ரயில் மாதை இணைப்புப் பணி ஆக்கப்பூர்வமாக நிறைவடைந்தது. சொங்சிங்-குன்மிங் அதிவிரைவுத் தொடர் வண்டி திட்டப்பணிக்கான மேற்கு சொங்சிங் மாநகரில் சீராக்கும் திட்டப்பணி துவங்கியுள்ளதை இது காட்டியுள்ளது.
சொங்சிங்-குன்மிங் அதிவிரைவு தொடர் வண்டி, சீனாவின் முக்கிய உயர் வேகத் தொடர் வண்டிகளில் ஒன்றாகும்.
இது, பெய்ஜிங்-குன்மிங் தொடர்வண்டிகளின் முக்கிய வழித்தடமாக இது விளங்குகிறது. இத்தொடர்வண்டி, மேற்கு சொங்சிங் முதல், சிச்சுவான், குய்சௌ மற்றும் யுன்னான் முதலிய மாநிலங்களை நோக்கி, தெற்கு குன்மிங் நிலையத்திற்குச் சென்றடைகிறது.
இதன் மொத்த நீளம் 699 கிலோமீட்டராகும். வடிவமைப்பு ரீதியில், 21 தொடர் வண்டி நிலையங்கள் உள்ள இந்த அதிவிரைவு தொடர் வண்டி மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்.