வளைகுடா நிலைமை பற்றிய சீனாவின் வேண்டுகோள்

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூச்சொங் மே 19ஆம் நாள் நடைபெற்ற மத்திய கிழக்குப் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்பவையின் அவசரக் கூட்டத்தில் கூறுகையில், பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, வளைகுடாவின் பதற்ற நிலைமை மேலும் தீவிரமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பரக்கா அணுமின் நிலையம் அண்மையில் தாக்கப்பட்டது. இந்த அபாயமான மற்றும் பொறுப்பற்ற செயல், சர்வதேச சமூகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலைமை தீவிரமாவதற்குரிய அபாயம் இன்னும் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு அச்சுறுத்தல் தன்மை வாய்ந்த பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதையும், போர் மீண்டும் துவங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

You May Also Like

More From Author