பூமியில் இருந்து ‘ஒரு ஒளி நாள்’ தூரத்தைக் கடந்த ‘வாயேஜர்-1’..!

Estimated read time 1 min read

நாசாவின் வாயேஜர்-1 விண்கலம் 18-ஆம் தேதி பூமியில் இருந்து சுமார் 2,590 கோடி கிலோ மீட்டர் தொலைவை, அதாவது ஒரு ‘ஒளி நாள்’ தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 1977, செப்., 5ம் தேதி வாயேஜர் – 1 விண்ணில் ஏவப்பட்டது. இதன் இரட்டை செயற்கைக்கோளான, வாயேஜர் – 2, அந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி ஏவப்பட்ட போதிலும், சில மாதங்களிலேயே வாயேஜர் – 1 அதனை முந்திச் சென்றது

• சூரிய குடும்பத்தின் வெளிப்புற கோள்களான வியாழன், சனி ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக இவை அனுப்பப்பட்டன. இந்த பயணத்தின்போது, வியாழன் மற்றும் சனியின் புதிய துணைக்கோள்கள், அவற்றின் வளையங்கள் குறித்த பல புதிய தகவல்களை பூமிக்கு அனுப்பின

• சூரியனின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து, 2012ல் வாயேஜர் – 1 செயற்கைக்கோள், விண்மீன்களுக்கு இடையேயான பகுதிக்குள் நுழைந்தது. வாயேஜர் – 2, இந்த எல்லையை, 2018ல் அடைந்தது

• ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு, 3 லட்சம் கி.மீ., ஆகும். அதன்படி, 24 மணி நேரத்தில், 2,596 கோடி கி.மீ., கடப்பதே, ஒரு ஒளி நாள் என்றழைக்கப்படுகிறது • பூமியிலிருந்து 2,600 கோடி கி.மீ. துாரம் பயணித்து, ஒரு முழு ஒளி நாளை வாயேஜர் – 1, நேற்று எட்டியுள்ளது. இந்த செயற்கைக்கோள், மணிக்கு 61,000 கி.மீ., வேகத்தில் விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறது

• வாயேஜர் – 1 அடைந்துள்ள இந்தத் தொலைவை, அதன் இரட்டை செயற்கைக்கோளான, வாயேஜர் – 2 அடைய இன்னும் ஒன்பது ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது

இந்த செயற்கைக்கோளை, வேற்றுகிரகவாசிகள் அல்லது எதிர்கால அறிவார்ந்த உயிரினங்கள் ஒருவேளை கண்டெடுத்தால், பூமியை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அதில், ‘கோல்டன் ரெக்கார்டு’ எனப்படும் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 55 மொழிகளில் வாழ்த்துகள், இசை, ஒலிகள் மற்றும் பூமியின் நாகரிகம் குறித்த படங்கள் இடம்பெற்றுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author