இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று சுவிஸ் பிரதிநிதிகள் குழு அழைப்பு விடுத்தது.
இந்தியாவின் சார்பாக பதிலளித்த ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் ஆலோசகரான க்ஷிதிஜ் தியாகி, இந்தக் கருத்துக்கள் “ஆச்சரியகரமானவை, ஆழமற்றவை மற்றும் தவறான தகவல்கள்” என்று விவரித்தார்.
‘உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்’: சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி
