சீனா நடத்தும் ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலை கூட்டம்

நடப்பு திங்களில் ஐ.நா பாதுகாப்பவையின் தலைமை நாடான சீனா, மே 26ஆம் நாள், ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டையும் குறிக்கோளையும் பேணிக்காப்பது மற்றும் ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு முறை என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நியூயார்க் நகருக்குச் சென்று இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்குவார். 28ஆம் நாள், நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள உலக நிர்வாக நண்பர் குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார். மேலும் ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ், தொடர்புடைய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோரை அவர் சந்தித்து பேச உள்ளார்.

You May Also Like

More From Author