ஹாங்காங்கில் தொடங்கிய உலக நிதி மன்றத்தின் ஆண்டு கூட்டம்

உலக நிதி மன்றத்தின் 9ஆவது  கூட்டம் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான 2026 ஆண்டு கூட்டம் மே 21ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்றது.

உலகளவில் அரசியல், வணிகம், கல்வி, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். உலகில் கொந்தளிப்பான மாற்றம் மற்றும் சீர்திருத்தம், பொருளாதார மற்றும் நிதித் துறை வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கங்கள், உலகப் பொருளாதார மீட்சியில் ஹாங்காங்கின் முக்கிய தகுநிலை முதலியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

ஹாங்காங், உலகளவில் 3ஆவது இடத்தையும் ஆசியாளவில் முதலிடத்தையும் வகிக்கும் சர்வதேச நிதி மையாகும். சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய மதிப்பீட்டின்படி, ஹாங்காங்கில் உள்ள வங்கிகள் போதுமான மூலதனம், நிதானமான பணப்புழக்க நிலைமை, சிறந்த இலாபம் ஈட்டும் திறன், நம்பகமான இணைக்கப்பட்ட நாணயப் பரிமாற்ற அமைப்பு முதலிய மேம்பாடுகளைக் கொண்டுள்ளன.

இதனிடையில் ஹாங்காங்கில் நாணயம், வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகிய 4 மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக உலக நிதி மன்றம் மற்றும் பிரிக்ஸ் சிந்தனைக் கிடங்கின் தலைமை ஆலோசகர் சு குவாங்யோவ் கருத்து தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author