அயத்துல்லா அலி கமேனி கொலை – ரஷ்ய அதிபர் கண்டனம்!

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில், ஈரான் உச்சத்தலைவர் கமேனி சனிக்கிழமையன்று கொல்லப்பட்டார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புடின், ஈரான் உச்சத் தலைவர் கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு எனது ஆழ்ந்த இரங்கலை ஏற்றுக் கொள்க என தெரிவித்துள்ளார்.

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கொலை செயல் இழிவானது என கூறியுள்ள ரஷ்ய அதிபர் புடின்,

கமேனியின் கொலை மனித ஒழுக்கம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறிய செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய – ஈரானிய உறவுகளை வளர்ப்பதற்கு மிகப்பெரிய தனிப்பட்ட பங்களிப்பை செய்த ஒரு சிறந்த அரசியல்வாதியாக கமேனி நினைவுகூரப்படுவார் என தெரிவித்துள்ள புடின்,

ஈரான் அரசுக்கும், அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகுந்த அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author