இன்று தமிழகம் முழுவதும் தவெக சார்பில் அன்னதானம் வழங்கப்படும் – முதல்வர் விஜய் உத்தரவு!

Estimated read time 1 min read

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க முதலமைச்சர் விஜய் தவெக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 2,000 முதல் 3,000 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்.

உலகளவில் பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வறுமைக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியவும் 2011-ஆம் ஆண்டு முதல் ‘தி ஹங்கர் ப்ராஜெக்ட்’ அமைப்பால் துவங்கப்பட்ட உலக பட்டினி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

தவெக கட்சியின் சார்பில் தொகுதிக்கு 3,000 நபர்கள் வீதம் மாநிலம் முழுவதும் இன்று பொதுமக்களுக்கு சுவைமிக்க உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளன.பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

You May Also Like

More From Author