கோவை வெள்ளலூர் பகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நூற்றுக்கணக்கானோர் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் வண்ணம், இன்றைய தினம் @BJP4Tamilnadu மாநிலப் பொதுச்செயலாளர் திரு @apmbjp அவர்கள் முன்னிலையில், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட… pic.twitter.com/zNvqi7td8d
— K.Annamalai (@annamalai_k) January 28, 2024
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் வண்ணம், இன்றைய தினம் தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் AP முருகானந்தம் முன்னிலையில், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் மற்றும் கட்சிசாரா அமைப்புகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் என நூற்றுக்கணக்கானோர், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்கள் அனைவரையும் வரவேற்பதோடு, அனைவரும் தங்கள் மக்கள் நலப் பணிகளைத் தொடர வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறேன்.