உளவு ஒருங்கிணைப்பு முறைமையை உருவாக்குவதில் ஜப்பான் கவனமாக செயல்பட வேண்டும்:சீனா வேண்டுகோள்

தேசிய நிலை உளவு ஒருங்கிணைப்பு முறைமையை உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் மே 28ஆம் நாள் கூறுகையில், ஜப்பானின் இச்செயல் அதன் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சர்ச்சை மற்றும் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதை சீனா கவனித்துள்ளது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், வரலாற்றில் ஜப்பானின் உளவு நிறுவனம் அதன் இராணுவ வாதத்தின் முன்முக பரவலுக்கும் வெளிநாடுகளின் மீதான அதன் ஆக்கிரமிப்புப் போருக்கும் சேவைபுரிந்து, எண்ணற்ற குற்றங்ளைச் செய்திருந்தது. ஜப்பானின் அரசியல்வாதிகள் வரலாற்றிலிருந்து பாடம் புகட்டி கவனமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author