சீனச் சர்வதேசப் பல்கலைக்கழக மாணவர் புத்தாக்கப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஷிச்சின்பிங் ஊக்கம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சீனச் சர்வதேச பல்கலைக்கழக மாணவர் புத்தாக்க போட்டியில் பங்கேற்ற மாணவர் பிரதிநிதிகளுக்குப் பதில் கடிதம் அனுப்பி அவர்களுக்கு அன்பான ஊக்கத்தையும் மனமார்ந்த எதிர்பார்ப்பையும் தெரிவித்தார்.


ஷிச்சின்பிங் வலியுறுத்துகையில், புத்தாக்கம் மனிதகுலம் முன்னேறுவதற்கான உந்து ஆற்றலாகும். இளைஞர்கள் புத்தாக்கத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள் ஆவர் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இளைஞர்களாகிய நீங்கள் அறிவியல் எழுச்சியை வெளிக்கொணர்ந்து அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு ஆக்கப்பூர்வமாக அர்ப்பணித்து சீன மற்றும் வெளிநாட்டு அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் முன்னேற்றுவதற்குரிய பங்களிப்பை ஆற்ற வேண்டுமெனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author