சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரில் மார்ச் 5ஆம் நாள் காலை சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அரசுப் பணி குறித்த அறிக்கையை வழங்கினார்.
இந்த அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 34 இலட்சம் 90 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி, 5 விழுக்காட்டு அதிகரிப்பை நனவாக்கியுள்ளது. உலகப் பொருளாதார அதிகரிப்பில் சீனா சுமார் 30 விழுக்காட்டை நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டின் பணிகள் பற்றி அவர் கூறுகையில் 2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் 5 விழுக்காட்டு அதிகரிப்பை நனவாக்குவது, நகரில் வேலையற்றோர் விகிதம் சுமார் 5.5 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்துவது, தானிய விளைச்சல் சுமார் 70 ஆயிரம் கோடி கிலோகிராமை எட்டுவது, உயிரினச் சுற்றுசூழல் தரம் தொடர்ந்து மேம்படுவது ஆகியவை இவ்வாண்டின் வளர்ச்சியின் முக்கிய இலக்குகளாகும்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பு நிலைமையை விரிவாக்கி, வெளிநாட்டு வர்த்தகத்தையும் முதலீடுகளையும் ஆக்கப்பூர்வமாக நிதானப்படுத்த வேண்டும். உயர் தரமுள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைத்து, இரு மற்றும் பல தரப்பு ஒத்துழைப்புகள் மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், தற்சார்ப்பு மற்றும் அமைதியான வெளிநாட்டுறவுக் கொள்கையில் சீனா உறுதியாக ஊன்றி நின்று வருகிறது. மேலாதிக்கவாதம் மற்றும் ஆதிக்க அரசியலை எதிர்க்கின்றது. அனைத்து வடிவத்திலான ஒருதரப்புவாதம், பாதுகாப்புவாதம் ஆகியவற்றுக்குச் சீனா எதிர்ப்புத் தெரிவித்து, சர்வதேச நேர்மை மற்றும் நியாயத்தைப் பேணிக்காப்பதில் ஈடுபடுகிறது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து, உலக மேலாண்மை அமைப்புமுறையின் சீர்திருத்தம் மற்றும் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, மனித குலத்தின் பொது சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்கச் சீனா பாடுபடும் என்று லீ ச்சியாங் தெரிவித்தார்.