சீனா-அமெரிக்கா இடையே சுங்கவரி பற்றிய பேச்சுவார்த்தையின் முன்னேற்றம்

சீனா-அமெரிக்கா இடையே சுங்கவரி பற்றிய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றிய கேள்விக்கு சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யாடோங் மே 28ஆம் நாள் பதிலளிக்கையில், சுங்கவரியானது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் முக்கியமான விவகாரம் ஒன்று என்றும், இருநாட்டு அரசுத் தலைவர்களின் உத்திநோக்கு வழிகாட்டலில் இருநாடுகளின் பணிக் குழுக்கள் சுங்கவரி தொடர்பாக ஆழ்ந்த முறையில் பரிமாற்றம் மேற்கொண்டு, இருதரப்பு சுங்கவரிக்கு ஏற்பாடு செய்துள்ளன என்றும் தெரிவித்தார். அமெரிக்க தரப்பு தனது வாக்குறுதியை கடைப்பிடித்து, இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் விரிவாக்கத்துக்கு நேர்மறை நிலைமைகளை உருவாக்க வேண்டும் என மீண்டும் விருப்பம் தெரிவித்த அவர், வர்த்தக கவுன்சிலின் கீழ் இதே அளவிலான பொருட்களுக்கு பரஸ்பர வரி குறைப்புக்கான ஏற்பாடு குறித்து விவாதம் நடத்த இருதரப்பும் கொள்கை ரீதியில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author