சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 23ம் நாள் பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புடன் உயர்தர வளர்ச்சியை முன்னெடுத்து, சீன-பிரேசில் ஒத்துழைப்புக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார். உலகின் வளரும் நாடுகளில் முக்கிய உறுப்பு நாடுகளான சீனாவும், பிரேசிலும், உலக அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து, உலக நிர்வாக மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வ சக்திகளாகத் திகழ்கின்றன. இந்நிலையில் இவ்விரு நாடுகளும் உலகின் வளரும் நாடுகளின் பொது நலன்கள், ஐ.நாவின் மைய தகுநிலை மற்றும் சர்வதேச நியாயத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நாவின் செல்வாக்கைப் பேணிக்காத்து, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் பாதுக்காக்க விரும்புவதாக லூலா கூறினார்.
