உலகளாவிய ஆளுகை நண்பர்கள் குழுக் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுத்தல்

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 28ஆம் நாள், நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற உலகளாவிய ஆளுகை நண்பர்கள் குழுக் கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். பாகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான், கியூபா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 60க்கும் மேலான நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது வாங்யீ கூறுகையில், உலக ஆட்சி முறையை மேம்படுத்துவதற்குச் சீர்திருத்த ஆலோசனைகளை சீனா வழங்கியுள்ளது. ஐ.நா சீர்திருத்தை மேற்கொண்டு, தன் செல்வாக்கினை அதிகரிப்பது இதில் அடக்கம் என்றார்.

இவ்வாண்டின் இலையுதிர்க்காலத்தில், சியொங் ஆன் உலகளாவிய ஆளுகைக் கருத்தரங்கை சீனா நடத்தும். இதில், தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து, உலக ஆளுகைத் துறையின் சீர்திருத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாகக் கூட்டாக விவாதிப்பதைச் சீனா எதிர்பார்க்கிறது என்றார்.

உலகளாவிய ஆளுகை நண்பர்கள் குழுக் கூட்டத்தின் கூட்டறிக்கை இதில் வெளியிடப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author