ஜப்பான்-பிலிப்பைன்ஸ் இடையே சட்டவிரோதமான பேச்சுவார்த்தைக்கு சீனா எதிர்ப்பு

பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ஜப்பானில் பயணம் மேற்கொண்ட போது இவ்விருநாடுகள் மே 28ஆம் நாள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு, இரதரப்பு பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் கடலடி கண்டத் திட்டு எல்லை வரையறை தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதாக அறிவித்தன.

29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ஜப்பானும் பிலிப்பைன்ஸும் தன்னிசையாக தொடங்கிய இப்பேச்சுவார்த்தை சீனாவின் கடல் சார் உரிமை நலன்களை கடுமையாக பாதிப்பதோடு, ஐ.நாவின் கடல் சட்டம் பற்றிய பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களையும் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிகளையும் மீறுவதாக உள்ளது என்றும், இதனால் மனநிறைவின்மை அடைந்துள்ள சீனா, முறையே ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றும் கூறினார். மேலும், இவ்விரு நாடுகள் சீனாவின் உரிமை நலன்களை ஊறுபடுத்தும் செயலை உடனே நிறுத்தி, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author