உண்மை பொருளாதாரம் பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை ஜியூஷி இதழில் வெளியீடு

 

உண்மை பொருளாதாரத்தை சீராக வளர்ப்பது தொடர்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 2016ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் வரை நிகழ்த்திய முக்கிய உரைகள் ஒரு கட்டுரையாகத் தொகுக்கப்பட்டு, மே 16ஆம் நாள் ஜியூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.

உண்மை பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்துக்கு அடிப்படையாகவும், செல்வம் அடைவதற்கு ஊற்றுமூலமாகவும், நாட்டின் வலிமை மற்றும் செழுமைக்கு ஆதாரமாகவும் திகழ்கிறது. உண்மை பொருளாதாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தி, விரிவுபடுத்தி மேம்படுத்தும் வகையில், பொருளாதார வளர்ச்சியின் மைய இடத்தில் உண்மை பொருளாதாரத்தை வைக்கவும், புதிய ரக தொழில்மயமாக்கத்தை முன்னேற்றவும் வேண்டும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தித் தொழில் உண்மை பொருளாதாரத்தின் அடிப்படையாகும். இதன் உயர்தர வளர்ச்சியை மேலும் முக்கியமான இடத்தில் வைக்க வேண்டும் என்றும், நவீன தொழில்துறை அமைப்புமுறையைக் கட்டமைத்து, உண்மை பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், உண்மை பொருளாதாரத்துக்கு நிதித்துறை சேவைபுரிவது என்பதை அடிப்படை குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்றும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author