டுக்சூரி சூறாவளி பாதிப்பினால், ஹாய் ஆற்றின் பள்ளத்தாக்கில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சீனாவின் தியேன் ஜின், ஹெ பெய், ஹெ நான் உள்ளிட்ட பிரதேசங்களில், வெள்ளத்தைச் சேமிக்கும் 8 தேசிய மண்டலங்கள் முறையே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 184.7 கோடி கனமீட்டர் வெள்ள ஓட்டம் தடுக்கப்பட்ட பின், ஆற்றின் கீழ் பகுதியில் வெள்ளத் தடுப்பு நிர்பந்தம் தணிவடைந்தது.
ஆக்ஸ்ட் 9ஆம், சீனாவின் நிதித் துறை அமைச்சகம், நீர் வள அமைச்சகம் ஆகியவை, 100 கோடி யுவானை அவசரமாக ஒதுக்கீடு செய்தன. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பயிர், வளர்ப்பு தொழில், பொருளாதாரக் காடு, உறைவிடம், வேளாண் உற்பத்தி இயந்திரம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட இழப்புக்கும், மக்களின் வாழ்க்கை மீட்சிக்கும், இந்நிதி பயன்படுத்தப்படும்.