சீன-அமெரிக்க உறவின் புதிய அத்தியாயம்

Estimated read time 1 min read

அமெரிக்க அரசுத் தலைவர் டிராம்பின் சீன பயணம் குறித்து சர்வதேச செய்தி ஊடகங்கள் உயர்வாக கவனம் செலுத்தின. இப்பயணத்தின் போது இரு நாட்டு தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நடத்தினர். சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான உத்திநோக்கு நிலைத்தன்மையுடைய உறவைக் கட்டியமைப்பது, இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய அரசியல் பொது கருத்து ஆகும். அடுத்த 3 ஆண்டுகள் அல்லது நீண்டகாலத்திற்கான சீன-அமெரிக்க உறவுக்கு இது வழிகாட்டியதோடு, உலகிற்குத் தேவையான நிலைத்தன்மையையும் உறுதித்தன்மையையும் வழங்குகிறது.

ஆக்கப்பூர்வமான உத்திநோக்கு நிலைத்தன்மையை ஷி ச்சின்பிங் ஆழமாக விளக்கினார். ஒத்துழைப்பை முக்கியமாக கொள்வது, சரியான அளவில் போட்டியை மேற்கொள்வது, சர்ச்சைகளைக் கட்டுப்படுத்துவது, அமைதியைப் பேணிக்காப்பது ஆகியவற்றைக் கொண்ட நிலைத்தன்மை இதுவே ஆகும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், சீன-அமெரிக்க உறவின் அடிப்படையாகவும் உன்து ஆற்றலாகவும் மாற வேண்டும். சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் முதல் ஆண்டு இவ்வாண்டு ஆகும். அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 250ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். முக்கிய ஆண்டில், இந்த முக்கிய பொது கருத்தை வழிகாட்டலாக கொண்டு, சீன-அமெரிக்க உறவு புதிய அத்தியாயத்தைத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author