சீனா-தெற்காசிய நாடுகள் இடையே வர்த்தக அளவு அதிகரிப்பு

Estimated read time 1 min read

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மே 29ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சீனா-தெற்காசியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றியும், 10ஆவது சீனா-தெற்காசிய பொருட்காட்சி குறித்தும் அறிமுகம் செய்ததோடு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது.

சீனாவின் துணை வணிக அமைச்சர் யான் டோங் கூறுகையில், சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு அளவு புதிய வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றார். 2025ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தக மதிப்பு 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, முந்தைய ஆண்டை விட 10.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து சீரான வளர்ச்சிப் போக்கை பராமரித்து, வர்த்தக மதிப்பில் 15.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. தற்போது, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலதீவு ஆகிய நாடுகளின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author