ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 62ஆவது அமர்வில் இக்கவுன்சில் நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவுக்கான உயர்நிலை உரையாடல் கூட்டம் 19ஆம் நாள் நடைபெற்றது.
ஐ.நா. தலைமை செயலாளர் குட்ரெஸ் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். சீனாவின் பிரதிநிதி ஜியா குய்தே இக்கூட்டத்தில் பங்கெடுத்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.
நாகரிகங்கள் பல்வகைமையைக் கொண்டுள்ளன. பல்வேறு நாடுகள் தங்களால் சுதந்திரமாக தெரிவு செய்த மனித உரிமைக்கான வளர்ச்சிப் பாதைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஜியா குய்தே வலியுறுத்தினார். மேலும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து சர்வதேச மனித உரிமை லட்சியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை முன்னேற்றவும், மனிதகுலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை கூட்டாக உருவாக்கவும் விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
