தமிழக சுகாதாரத்துறை இன்று அதிரடி உத்தரவு

Estimated read time 1 min read

அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் சில அலட்சியப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழக சுகாதாரத்துறை இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..!

“இனிமேல் புறநோயாளிகள் பிரிவு (OP) மருத்துவர்கள் காலை 7.30 மணிக்கே உரிய நேரத்திற்குப் பணிக்கு வந்துவிட வேண்டும்; அதேபோல, உள் நோயாளிகள் பிரிவில் (IP) 24 மணி நேரமும் மருத்துவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாக, மருத்துவமனைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் விவகாரமான “தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு ஊசி போடுவதையோ அல்லது முதலுதவி (First Aid) சிகிச்சைகள் செய்வதையோ எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது” எனச் சுகாதாரத்துறை மிகக் கடுமையான ரெட் கார்டு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த விதிகளை மீறி ஏதேனும் குளறுபடிகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உடனடியாகத் துறைரீதியான கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் தேடி வரும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த அரசு எடுத்துள்ள இந்த அதிரடி கிடுக்கிப்பிடி, இப்போ பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சோசியல் மீடியாவில் அனல் பறந்துக்கிட்டு இருக்கு..!

You May Also Like

More From Author