16வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா ஏப்ரல் 16 முதல் 25ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின்போது, துவக்க விழா, விருது வழங்குதல், திரைப்படங்கள் திரையிடுதல், கருத்தரங்குகள், 33வது பல்கலைக்கழக மாணவர் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வகை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இவ்வாண்டு பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில், மேலும் பரந்த சர்வதேச பார்வையுடன், உலகளாவிய பல்வகை திரைப்பட கலாச்சாரங்கள் எடுத்துக்காட்டப்படும்.
