சென்னை துறைமுகத்தில் சல்பர் தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம் 

Estimated read time 1 min read

சென்னையில் தலைமைச் செயலகம் எதிரே தற்போது கடும் புகைமூட்டம் நிலவுவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதாவது சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள சல்பர் தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் இருமல் மற்றும் குமட்டலால் அவதி அடைந்துள்ளனர். மேலும் துறைமுகத்திலிருந்து நச்சுப்புகை கசியும் நிலையில் தலைமைச் செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் புகைமூட்டம் நிலவுகிறது.

இதன் காரணமாக தற்போது ரசாயன பொடிகளை தூவி நிலைமையை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப் படுத்துள்ள நிலையில் ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதிக்கு விரைந்துள்ளது. மேலும் ஐந்துக்கும் ஏற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் மீட்பு பணிக்காக வீரர்கள் வந்துள்ளனர். மேலும் கடும் துர்நாற்றத்துடன் நச்சுப்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

You May Also Like

More From Author