திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

Estimated read time 1 min read

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும்,

தமிழகத்திற்கான 3,284 கோடி ரூபாய் கல்வி நிலுவை தொகையை விடுவிக்க கோரியதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன்,

சென்னை – குமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கோரியதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டுக் குடிநீர் வழங்கல் திட்டத்துக்காக சுமார் 2 ஆயிரத்து 283 கோடி ரூபாய் வழங்க கோரியுள்ளதுடன்,

செங்கல்பட்டு – திருச்சி வரையிலான சாலையை 6 வழிப்பாதையாக மேம்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author