இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், சீனாவின் சரக்கு வர்த்தகத் தொகையானது, 32.33 லட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அவற்றில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை முறையே 6.2 விழுக்காடு மற்றும் 4.1 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று சீன சுங்கத்துறை வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 3 காலாண்டுகளில் சரக்கு வர்த்தகத் தொகை 32 லட்சம் கோடி யுவானைத் தாண்டுவது இதுவே வரலாற்றில் முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.