சென்னையில் விரைவில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள்!

Estimated read time 1 min read

சென்னை கடற்கரை – செங்கல் பட்டு வழித்தடத்தில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வரவில்லை. கால தாமதத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…..

சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களின் வளர்ச்சியை பொறுத்தே இந்தியாவின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகிறது.

பாஜக ஆட்சியில் 4 பெருநகரங்களிலும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் இரயில்வே துறை கண்டிருக்கும் முன்னேற்றம் முன் எப்போதும் இல்லாதது ஆகும். வந்தே பாரத் ரயில் அறிமுகம் ஆகட்டும், அமிர்த பாரத் ரயில் நிலையங்கள் ஆகட்டும், புல்லட் ரயில் சாதனையாகட்டும், இந்திய இரயில்வே துறை பல புதுமையான சாதனைகளை செய்து வருகிறது.

இந்த வரிசையில், குளிரூட்டப்பட்ட புறநகர் இரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, மும்பையில் முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்த குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை போரிவிலி ரயில் நிலையத்தில் இருந்து சர்க்கேட் வரை இயக்கப்படுகிறது.

மும்பைக்கு கிடைத்தது போல் நாட்டில் உள்ள எல்லா மாநகரங்களுக்கும் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, இதற்காக திட்ட வரைவு அறிக்கைகள் தயாரித்து, அதற்கான செயல் திட்டங்களும் வேக வேகமாக முன்னெடுத்தது.

குறிப்பாக சென்னையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ள ரயில்வே வாரியம், சென்னை ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் 2 AC EMU-க்கள் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் பகுதி இந்த ஆண்டும், இரண்டாவது பகுதி 2025ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்த தரவுகளை, தெற்கு ரயில்வே இடமிருந்து மெட்ரோ இரயில் நிறுவனம் சேகரித்து ஆய்வுகள் செய்து முடித்திருக்கிறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மும்பையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் செயல்பாடுகள், கட்டண அமைப்பு, செயல்பாட்டு செலவு மற்றும் நிறுவன அமைப்பு உட்பட பல விஷயங்கள் குறித்தும் ஆய்வுகள் நடந்து வருவதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இந்த குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைக்கான ஆய்வுகள் நடத்துவதால் தான், சென்னையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை தொடங்குவதற்கு காலம் தாமதம் ஆகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் .

குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், தாமதத்துக்கு காரணம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

எது எப்படியோ சென்னையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை விரைவில் வந்தால் போதும் என்கிறார்கள் சென்னை மற்றும் புறநகர்வாசிகள்….

Please follow and like us:

You May Also Like

More From Author