தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசுக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் வரி, வர்த்தக வரி உள்ளிட்ட பல்வேறு வகையில் வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் அரசு பணியாளர்கள் ஊதியம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி போன்ற காரணங்களுக்காக வரவை விட அரசுக்கு செலவே அதிகமாக உள்ளது.
இதற்கிடையே சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற பணிகளுக்காக அரசு தரப்பில் கடன் வாங்கப்படுகிறது.
அதன் படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டங்களில் 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் அரசு தரப்பில் வாங்கப்படுள்ளது, அதற்கான வட்டி 14 ஆயிரத்து 618 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த முழு ஆண்டில் 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு மொத்த கடன்களுக்காக 76 ஆயிரத்து 451 கோடி ரூபாயை வட்டியாக செலுத்த முடிவு செய்துள்ளது.
