2024ஆம் ஆண்டு பூமியின் சாம்பியன் (சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்) என்ற விருது பெற்றவர்களின் பட்டியலை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் 10ஆம் நாள் இணையதளத்தில் வெளியிட்டது.
சீனாவின் அறிவியலாளர் லுச்சி, இந்தியாவின் சூழலியல் ஆய்வாளர் மாதவ் காட்கில் உள்ளிட்டவர்கள் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
சீனாவில் மண் சிதைவாக்கத்தை தடுக்கவும், பாலைவனங்களைக் குறைக்கவும் உதவி செய்வதால், இதில் லு ச்சிக்கு அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் பிரிவின் கீழ் விருந்து வழங்கப்பட்டார். சீனர் ஒருவர், இந்தப் பிரிவில் விருது பெற்றது இதுவே முதல்முறையாகும்.
பல தசாப்தங்களாக ஆராய்ச்சி மற்றும் சமூக ஈடுபாடு மூலம் மக்களையும் புவியையும் பாதுகாப்பதால் இந்திய சூழலியல் ஆய்வாளரான மாதவ் காட்கில் வாழ்நாள் சாதனை விருது பெற்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, தனிநபர் மற்றும் அமைப்புகளின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் வகையில், ஐ.நா. வழங்கி வரும் உச்சநிலை சுற்றுச்சூழல் விருது, ‘பூமியின் சாம்பியன்’விருது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.