சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸ்ஸிங்கருடன் ஜூலை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.
வாங்யீ கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் தேக்க நிலையை முறியடிப்பதற்கும், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கும் முனைவர் கிஸ்ஸிங்கர் முக்கிய பங்காற்றியுள்ளார். பழைய நண்பர்களுடனான நட்புறவை சீனா பேணிமதித்து வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த ஒன்றுக்கொன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி ஆகியவை, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கான அடிப்படையான மற்றும் சரியான வழிமுறையாகும் என்றார்.
மேலும், தைவான் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டை வாங்யீ எடுத்துக்கூறினார். ஷாங்காங் கூட்டறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ள ஒரே சீனா என்ற கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும். தைவான் சுதந்திர சக்திகளை அமெரிக்கா நடைமுறை நடவடிக்கையின் மூலம் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிஸ்ஸிங்கர் கூறுகையில், அமெரிக்க-சீன உறவு, உலக அமைதி, நிதானம் மற்றும் மனித குலத்தின் நலன்களுடன் தொடர்புடையது. ஒரே சீனா என்பது, ஷாங்காய் கூட்டறிக்கையில் அமெரிக்கா வழங்கிய உறுதியான வாக்குறுதியாகும். இது மீறப்படாது என்றார்.
தவிரவும், உக்ரைன் பிரச்சினை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதம் நடத்தினர்.