எனது முதலாவது அடையாளம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். முதலாவது கடப்பாடு, கட்சிக்குப் பணி புரிவதாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
1974ஆம் ஆண்டு ஜனவரியில் ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். புரட்சி குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட அவர், கிராமப்புற உற்பத்தி குழுவின் கம்யூனிஸ்ட் கிளை பிரிவின் செயலாளர் முதல், கட்சி மற்றும் நாட்டின் அதியுயர் தலைவர் வரை, கட்சியில் சேர்ந்த பொது தான் எடுத்த உறுதிமொழியை எப்போதும் நினைவில் வைத்து, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் அரசியல் கோட்பாட்டைப் பின்பற்றிச் செயல்பட்டு வருகிறார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மிக அதிகமான மக்களின் அடிப்படை நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மக்களுடன் இன்பத்துன்பங்களில் துணை நின்று, பொதுவான தலைவிதியைப் பகிர்ந்து கொள்கின்றது என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.
கட்சியில் சேர்ந்த 52 ஆண்டுகளில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் மனமார்ந்த இதயத்துடன், “மக்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்” என்ற ஆரம்ப உறுதிமொழியையும் வாக்குறுதியையும் நிறைவேற்றி வருகின்றார்.
