சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள செர்பிய தலைமை அமைச்சர் மிலோஸ் வுசெவிக், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், மற்ற நாடுகள் மற்றும் தேசங்களுடன் சொந்த வளர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது, சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் தனிச்சிறப்பாகும்.
உலகின் பொருளாதாரத்தில், பல்வகை அறைகூவல்கள், வர்த்தகப் பாதுகாப்புவாதம் மற்றும் ஒரு தரப்புவாதம் முதலியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனா, வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை எப்போதும் பின்பற்றி, சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி போன்ற நடவடிக்கைகளின் மூலம், வணிகப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் மேடையை பல்வேறு நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுக்கான செர்பிய ஏற்றுமதி தொகை 200 மடங்கு அதிகரித்தது. செர்பியாவைப் பொருத்தவரை, சீனா, வலுவான ஒத்துழைப்பு கூட்டாளியாக விளங்கி, செர்பிய தொழில் நிறுவனங்கள் சீனச் சந்தைக்குள் நுழைவதற்கு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது.
இதன் மூலம், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகம் பற்றிய கருத்தைப் புரிந்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்பில் உள்ள பல திட்டப்பணிகள் செர்பியாவின் தேசிய முன்னேற்றத்தைத் தூண்டி, செர்பிய மக்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிட்ட அளவில் உயர்த்தியுள்ளன என்றும் தெரிவித்தார்.