2026 சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய இளம் அரசியல்வாதிகள் கருத்தரங்கு துவக்கம்

Estimated read time 1 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஹுபெய் மாநிலத்தின் கட்சி கமிட்டி ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த 2026 சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய இளம் அரசியல்வாதி கருத்தரங்கு ஜூன் 14ஆம் நாள் ஹுபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் துவங்கியது. மத்திய கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 14 நாடுகளின் அரசியல் கட்சிகள், சிந்தனைக் கிடங்குகள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சீனாவின் அமைச்சகங்கள் மற்றும் அரசு வாரியங்கள், பிரதேசங்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் சிந்தனை கிடங்குகளின் அறிஞர்கள் மற்றும் பிரதிநிதிகள் முதலிய 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஹைசிங் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் பிரதேச நாடுகளின் தலைவர்களின் தலைமையில், சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு சாதனைகள் அதிகமாக உள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்த விரும்புகிறது. இளைஞர்கள், இரு தரப்புகளின் கூட்டு செழுமைக்கு அறிவுத்திறமை மற்றும் சக்தியை பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author