தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

Estimated read time 1 min read

தமிழக முதலமைச்சர் விஜய், பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் நிதி நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் அதிரடியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே முதலமைச்சரின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தனிப்பட்ட உடை, மற்றும் நிர்வாக அணுகுமுறைகள் ஆகியவை சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வருகை புரியும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தலைமைச் செயலகத்திற்குள் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு வளாகத்தில் இதற்கு முன்பு இருந்த திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் மக்கள் நேரடியாக சென்று புகார் அளித்து வந்தனர். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக வந்து புகாரளிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் தலைமைச் செயலகத்தில் தினமும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தலைமைச் செயலகம் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே இனிமேல் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள், தங்களின் மனுக்களை சமர்ப்பிப்பதற்காக தலைமைச் செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வராமல் தங்களது புகார்களை பெட்டியில் சமர்ப்பிக்கலாம் மற்றும் தலைமைச் செயலகத்திற்குள் வரும் கூட்டத்தையும் கணிசமாக குறைக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இனி தலைமைச் செயலகத்திற்குள் சென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டு, முன்பு இருந்த பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author