ச்யூஷி இதழில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய கட்டுரை வெளியீடு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் திறமைசாலிக்கான வளர்ச்சியை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான முக்கிய கட்டுரை ஒன்று ஜூன் 16ஆம் நாள் இவ்வாண்டின் 12ஆவது தொகுதி ச்யூஷி இதழில் வெளியிடப்பட்டவுள்ளது.

2012ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் முதல் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் வரையான காலக்கட்டத்தில் ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரைகளும் உரைகளும் இதில் தொகுக்கப்பட்டன.

கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், திறமைசாலி முதலியவை, சோஷலிச சமூகத்தின் நவீனமயமாக்கத்தை முழுமையாகக் கட்டியமைக்கப்பதற்கான அடிப்படை மற்றும் நெடுநோக்குத் தன்மை வாய்ந்த ஆதரவுகளாகும் என்பது இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது.

அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் திறமைசாலி வளர்ச்சியில் கல்வியின் ஆதரவுக்கான பங்களிப்பைமேலும் வலுப்படுத்த வேண்டும். பன்முகப் புத்தாக்க அமைப்புமுறையைக் கட்டியமைக்க வேண்டும். பெருமளவு, சீரான கட்டமைப்பு, சிறந்த புத்தாக்கம் வாய்ந்த திறமைசாலி அணியை வளர்க்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது.

You May Also Like

More From Author