சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 17ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது, இரு நாட்டு உயர்நிலைப் பரிமாற்றம் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக விவாதித்தனர்.
வாங்யீ கூறுகையில்,
அண்மையில், சீன-அமெரிக்க உறவு ஒட்டுமொத்த அளிவில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு நிதானமான பாதையில் நடைபோட்டு வருகிறது. இது, சர்வதேசச் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற ஒன்றாகும். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் தூதாண்மை சார்ந்து வழங்கியுள்ள கருத்துகள் இரு தரப்புறவுக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அக்கருத்துகளின் அடிப்படையில் நியாயமான முறையில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, பரஸ்பர நன்மை பயக்கும் எழுச்சியோடு, அடுத்த காலக்கட்டத்திற்கான உயர் நிலைப் பரிமாற்றத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இருதரப்புகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை மேம்படுத்தி, கருத்து வேற்றுமைகளைக் கட்டுப்படுத்தி, இருவரது முக்கிய நலன்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். தவிரவும், ஆக்கப்பூர்வமான நெடுநோக்குடன் நிதான உறவுக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவதற்கான சரியான தகவல்களை வெளியிட வேண்டும் என்றார்.
இத்தொடர்பின் போது மத்திய கிழக்கு நிலைமை உள்ளிட்டவை குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
