ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

Estimated read time 1 min read

பிரான்ஸின் நைஸ் நகரில் பாரத் இன்னோவேட்ஸ் (( Bharat Innovates)) என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத் துறைக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார்

இந்தியா மற்றும் பிரான்ஸில் புதிதாக தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பிரான்ஸின் நைஸ் நகரில், பாரத் இன்னோவேட்ஸ் (( Bharat Innovates)) முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொங்கிவைத்தார். இதில், இந்தியாவிலிருந்து 120 தொழிலதிபர்கள், 15 உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 500-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா வளமான ஏஐ எதிர்காலத்தைக் கொண்டிருப்பதாகவும், தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் கொண்ட இளைஞர்களின் சக்தியை சர்வதேச தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரமர் மோடி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்ற விவகாரங்களில் இந்தியாவும் பிரான்ஸும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு, மேடையில் பிரான்ஸ் அதிபர் பாராட்டு தெரிவித்தார்.

You May Also Like

More From Author